மூன்று நாள் சுற்றுப்பயணத்தின் முதல் நாள் கோவைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதற்கான சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி.
முதல்வரின் இந்த பயணத்திற்கான ஏற்பாடுகளை கண்டு கோவை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. மக்களின் கூட்டத்தைக் கண்டு மிகவும் உற்சாகமாக தெரிந்தார் முதல்வர் ஸ்டாலின். கோவை மாவட்டத்திற்கான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், ஏற்கனவே பணிகள் முடிவுற்றிருக்கும் திட்டங்களைத் துவக்கி வைத்தல், மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என்று மும்முனை விழாவாக நடத்தினார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
இந்த விழாவின் மற்றொரு பகுதியாக மாற்றுக் கட்சியினரை திமுகவில் இணைக்கும் நிகழ்வை பொள்ளாச்சியில் ஏற்பாடு செய்திருந்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி. இதற்கான ஏற்பாடுகளும் பிரமாண்டமாக இருந்தன. நிகழ்ச்சியில், அதிமுக, பாஜக உள்ளிட்ட மாற்றுக் கட்சியிலிருந்து 50,000 பேர் திமுகவில் இணைந்தனர். அவர்களை முகமலர்ச்சியுடன் வரவேற்றார் முதல்வர் ஸ்டாலின். இப்படி ஒரு இணைப்பு விழாவை இதுவரை எந்த கட்சியும் நடத்தியதில்லை. திமுகதான் முதல்முறையாக நடத்தியிருக்கிறது. இந்த இணைப்பு விழாவைக் கண்டு எதிர்க்கட்சியினர் வாயடைத்துப் போயிருக்கிறார்கள். இப்படி மாபெரும் இணைப்பு விழாவை நடத்திக் காட்டிய அமைச்சர் செந்தில்பாலாஜியை பாராட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.