Skip to main content

வேலூரில் 50 லட்சம் மதிப்பிலான போதை பாக்குகள் பறிமுதல்

Published on 03/05/2019 | Edited on 03/05/2019

 

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட போதை பாக்குகளான ஹான்ஸ், குட்கா போன்ற பொருட்கள், பெங்களூர், மகாராஷ்டிராவில் இருந்து கடத்திவரப்பட்டு தமிழகத்தில் பரவலாக விற்பனை செய்யப்படுவதும், இதனை ஆங்காங்கே பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாகியுள்ளது.

 

kutka

 

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில்  ஆம்பூர் நகர காவல்துறையினர் மற்றும் தனிப்படை போலீசார் ஆம்பூர் பேருந்து நிலையம் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

 

வேலூர் மாவட்டம், ஆம்பூர் நகர காவல்துறையினர் தங்க நாற்கர சாலையில் மே 3 ந்தேதி காலை வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது, பெங்களூரிலிருந்து வேலூர் நோக்கி வந்த லாரியை மடக்கி சோதனை செய்தபோது, லாரியில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான குட்கா, ஹான்ஸ், போதை பாக்குகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் லாரி முழுவதும் பெட்டி பெட்டியாக இருந்தது சோதனையில் தெரியவந்தது. லாரியை ஓட்டிவந்த சேலத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் சுரேஷ் குமார் அவரது உதவியாளர் சரவணன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில் காரில் வந்தவர்கள் லாரிக்கு வழிகாட்டியாகவும் பாதுகாப்பாகவும் வந்ததாக அவர்கள் கூறினார்கள்.

 

kutka

 

இதனால் லாரிக்கு வழிக்காட்டியபடி வந்த ஒரு கார் ஒன்றையும் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வந்த வேலூர் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் இப்ராஹிம், முகமது பையாஸ் மற்றும் முகமது கௌவுஸ் ஆகியோரையும் கைது போலீசார் செய்தனர்.

 

அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்தனர். அவர்கள் மீது ஆம்பூர் நகர போலீசார் வழக்குபதிவு செய்து ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான போதைபாக்குகள் மற்றும் குட்காவை பறிமுதல் செய்ததுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும், லாரிக்கு பாதுகாப்பாக வந்த காரையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

kutka

 

பெங்களூருவில் இருந்து மட்டும் சாலை மார்க்கமாக தினமும் சுமார் 10 கோடி ரூபாய்க்கு மேல் போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன என்கின்றனர் காவல்துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகள்.

 

 

சார்ந்த செய்திகள்