Skip to main content

முதியோர்களைச் சந்திக்க 50 கி.மீ. பயணித்த எஸ்.பி

Published on 13/05/2023 | Edited on 13/05/2023

 

50 km to meet the elderly. S.P. who traveled

 

மனம் மகிழ்விற்காக பலர் கோவிலுக்கும், பொழுதுபோக்கு இடத்திற்கும், சுற்றுலா தளங்களுக்கும் செல்வது வழக்கம். ஆனால் மாறாக முதியோர் இல்லத்தைத் தேடி அவர்களிடம் கலந்துரையாடி மனமகிழ்வை ஏற்படுத்திக் கொள்ள 50 கிலோமீட்டர் பயணித்து மனமகிழ்ச்சி அடைந்து வருகிறார் கடலூர் மாவட்ட எஸ்.பி

 

சிதம்பரம், மாரியப்பா நகரில் அன்பகம் முதியோர் இல்லம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த முதியோர் இல்லத்தில் 25-க்கும் மேற்பட்ட முதியோர்கள் உள்ளனர். இங்குள்ளவர்களுக்கு சிதம்பரம் மற்றும் சுற்றுவட்ட பகுதியில் உள்ளவர்கள் பிறந்தநாள், திருமணநாள் உள்ளிட்ட நாட்களில் அளிக்கும் உதவியைக் கொண்டு மூன்று வேளை உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்படுகிறது.   

 

இந்நிலையில், கடந்த 5 வருடத்திற்கு முன் சிதம்பரம் டி.எஸ்.பி-யாக பணியாற்றிய ராஜாராமன் இதனையறிந்து இந்த முதியோர் இல்லத்திற்கு சென்று அங்குள்ள முதியவர்களிடம் பேசிக் கலந்துரையாடி மனமகிழ்ச்சி அடைந்து வந்தார். மேலும் இதனைச் சகிப்பு தன்மையுடன் நிர்வகித்து வரும் சுகுமாரையும் பாராட்டியுள்ளார். பின்னர் இவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு உள்ளிட்ட பிரிவுகளுக்குப் பணிமாறுதல் செய்யப்பட்டு பின்னர் பணி உயர்வு பெற்று மீண்டும் கடலூர் மாவட்டத்திற்கு எஸ்.பி-யாக கடந்த 3 மாதத்திற்கு முன் பொறுப்பேற்றார்.

 

50 km to meet the elderly. S.P. who traveled

 

இந்நிலையில் மே 13ம் தேதி திடீர் எனக் கடலூரிலிருந்து சிதம்பரத்திற்கு 50 கிலோமீட்டர் தூரம் இதற்காக மட்டும் பயணித்து முதியோர் இல்லத்திற்கு வருகை தந்துள்ளார். இவரின் திடீர் வருகையை யாரும் எதிர்பார்க்கவில்லை. இவரைப் பார்த்ததும் கட்டி தழுவி அரவணைத்து முதியோர்களின் முகத்தில் மகிழ்ச்சி ஒளி வீசியவாறு வரவேற்றனர். பின்னர் அவர் அங்குள்ள முதியவர்களிடம் கலந்துரையாடி 2 மணி நேரத்திற்கு மேல் அவர்களுடன் மனம் திறந்து பேசி மனம் மகிழ்வு அடைந்தார். இது முதியோர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

பின்னர் அவர் முதியோர்களிடம் அடுத்தமுறை வரும்போது சம்பளம் வாங்கியவுடன் அனைவருக்கும் துணி எடுத்து வருவதாகத் தெரிவித்தார். அதற்கு முதியவர்கள் பல லட்சங்கள் செலவு செய்து படிக்கவைத்து வேலை வாங்கிகொடுத்து சொத்துபத்து எழுதிவைத்த பிள்ளைகளே இதுபோல் வந்து பார்த்துப் பேசியது இல்லை. யாரென்று தெரியாத எங்களிடம் நீங்கப் பேசுவது மகிழ்ச்சியாக உள்ளது. இதுபோல வந்து அன்பா பேசினாலே போதும்பா எனக்கூறியது எஸ்பி உள்ளிட்ட அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் தொடர்ந்து நேரம் ஒதுக்கி வருவதாகவும் உறுதி கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்