Published on 29/03/2020 | Edited on 29/03/2020
கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் 190 நாடுகளின் இயல்பு நிலையை பாதித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய அளவில் கரோனா பாதிப்பினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 900 கடந்துள்ளது.

தற்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்த நிலையில் குஜராத்தில் மட்டும் கரோனா வைரசினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது. மேலும் ஜம்மு காஷ்மீரில் ஒருவர் கரோனாவால் பலியான நிலையில் தற்போது இந்திய அளவில் 22 என்ற நிலையில் அதிகரித்துள்ளது உயிரிழந்தோர் எண்ணிக்கை.