தமிழகத்திற்கு முதல் கட்டமாக 5 லட்சம் டூர் கரோனா தடுப்பூசிகள வந்திருப்பதாக தமிழக மருத்துவத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''18 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் பணிக்காக கரோனா தடுப்பூசிக்கு தமிழக அரசு சார்பில் 46 கோடி ரூபாய் முன்பணம் செலுத்தப்பட்டுள்ளது. 15 லட்சம் தடுப்பூசிகள் கேட்கப்பட்டுள்ள நிலையில் முதல் கட்டமாக 5 லட்சம் தடுப்பூசிகள் வந்திருக்கிறது. அவற்றை இரண்டு அல்லது மூன்று நாட்களில் சென்னையில் ஏதாவது ஒரு பகுதியில் 18 வயது முதல் 45 வயதினர் பயன்பெறும் வகையில் அதைச் செலுத்துகிற பணி தொடங்கப்பட இருக்கிறது'' என்றார்.
மேலும், சேலம் இரும்பாலையில் 500 படுக்கையுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் மே 25 க்குள் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.