விஜயதாரணிக்கு தமிழிசை 3 கேள்வி
நீட் தேர்வு பற்றி விமர்சனம் செய்த காங்கிரஸ் எம்எல்ஏ விஜய தாரணிக்கு, பாஜ தலைவர் தமிழிசை 3 கேள்விகளை கேட்டுள்ளார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி பேட்டியளித்தார். அப்போது,
மத்திய, மாநில அரசுகளையும், தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜனையும் கடுமையாக விமர்சித்தார். அவரது இந்த பேச்சுக்கு பதிலளித்து தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கேட்கும் விஜயதாரணியிடம் 3 கேள்விகளை கேட்கிறேன். அதாவது, இந்தியா முழுவதும் நீட் தேர்வு என்ற கொள்கை முடிவை முதன் முதலில் கொண்டுவந்தது யார்?. இரண்டாவதாக நீட் தேர்வுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்துக்கு சென்று
வாதாடியது யார்?. காங்கிரஸ் மூத்த தலைவர் மனைவி நளினி சிதம்பரம் தானே? மூன்றாவது கேள்வி, கல்வியை மாநிலப்பட்டியலில் இருந்து, மாநில உரிமையிலிருந்து பொதுப்பட்டியலில் சேர்த்தது யார்? இவ்வாறு கூறியுள்ளார்.