காட்டுமன்னார்கோவில் அருகே சி.புத்தூர் கிராமத்தில் வடவாற்றில் குளிக்க சென்ற 3 சிறுமிகளில் 2 பேர் பலி 1 சிறுமி உயிருடன் மீட்கப்பட்ட சம்வம் அப்பகுதியில் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காட்டுமன்னார்கோவில் அடுத்த சிறுகாட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட சி.புத்தூர் கிராமம் வடவாறு ஆற்றங்கரை அருகே அமைந்துள்ளது. 15 அடிகள் ஆழம் இருக்கும் அப்பகுதி ஆற்றில் பெரியவர்கள் தவிற பெண்கள் மற்றும் சிறுவர்கள் படிகளில் அமர்ந்து குளிப்பது வழக்கம்.
நேற்று பகல் 1 மணியளவில் அப்பகுதியை சேர்ந்த ரஜினிகாந்த்-கவிதாவின் 10 வயது மகள் சினேகா, தினகரன்-இளமதியின் மகள் 7 வயது தீபிகா மற்றும் விஜயகுமார்-உஷா ஆகியோரின் மகள் 8 வயது விஜயலெட்சுமி ஆகிய மூவரும் ஆற்றுக்கு குளிக்க சென்றதாக தெரிகிறது. இதில் திடீரென தீபிகா மற்றும் சினேகா ஆகியோர் படிக்கட்டில் வழுக்கி ஆற்றில் விழுந்துள்ளனர். இதை பார்த்த அருகே இருந்த விஜயலெட்சுமி இருவரின் தலை முடிகளை பற்றிக்கொண்டு கூச்சலிட்டதாக தெரிகிறது. சிறிது நேரத்தில் பிடியில் இருந்த இருவர் உட்பட சிறுமி விஜயலெட்சுமியும் ஆற்றில் விழுந்து அடித்து செல்லப்பட்டனர்.
விழுந்த இடத்தில் இருந்து சுமார் 50 அடிகள் தூரத்தில் கரையோரம் இருந்த புல் புதரை பற்றிக்கொண்ட சிறுமி மற்ற இருவரையும் காப்பாற்றும்படி கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். சத்தம்கேட்டு அப்பகுதியில் ஆடுமேய்த்து கொண்டிருந்த சிலர் ஆற்றில் இறங்கி சிறுமி கூச்சலிட்ட விஜயலெட்சுமியை மீட்டனர். இதற்கிடையில் மற்ற இரண்டு சிறுமிகளும் ஆற்றில் மூழ்கிவிட்டனர். தொடர்ந்து தேடலில் ஈடுபட்ட கிராமத்தினர் உயிரிழந்த நிலையில் சிறுமி சினேகாவின் உடலை மீட்டு கரைசேர்த்தனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு படையினர் மற்றொரு சிறுமியின் உடலை ஊர்பொதுமக்களின் உதவியுடன் மீட்டனர்.
இதுகுறித்து ஊர்பொதுமக்களிட்ம் கேட்டபோது, கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தங்கள் பகுதி வடவாற்றில் படிக்கட்டுகள் உடைந்து சேதமடைந்து உள்ளன. இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க கிராமவாசிகள் தங்களின் பிள்ளைகளை தனியாக ஆற்று அனுப்புவதில்லை, தற்போது நடந்த துயர சம்பவம் எவரும் எதிர்பார்க்காதது. பொங்கல் வேலைகளில் கிராமமக்கள் ஈடுபட்டிருந்த வேலையில் சிறுமிகள் ஆற்றிக்கு சென்றதை கவனிக்கவில்லை என தெரிவித்தனர். ஒரே தெருவில் பக்கத்து பக்கத்து வீட்டு சிறுமிகள் இருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.