கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், சேஷ சமுத்திரம், மாதவச்சேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மெத்தனால் கலக்கப்பட்ட கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தக் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக இதுவரை 21 பேர் கைது செய்த நிலையில் இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கண்ணுக்குட்டி என்கின்ற கோவிந்தராஜ், விஜயா, தாமோதரன், சின்னதுரை, ஜோசப் ராஜா, மாதேஷ், சிவக்குமார், நடுப்பையன், கதிரவன், கௌதம சந்த் ஜெயின், பென்சிலால் ஆகிய 11 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை(28.6.2024) அன்று சிபிசிஐடி போலீசார் கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை இன்று(1.7.2024) கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது, இந்த விசாரணைக்காக சிபிசிஐடி போலீசார் ஏடிஎஸ்பி கோமதி தலைமையில் முக்கிய குற்றவாளியான 11 பேரையும் கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
சிபிசிஐடி போலீசார் 11 பேரையும் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் அவர்களை விசாரணைகாக கஸ்டடி எடுக்க மனு செய்தனர். போலிஸார் 5 நாள் கஸ்டடி கேட்ட நிலையில் 3 நாள் மட்டும் வழங்கப்பட்டது. வருகின்ற புதன்கிழமை வரை சிபிசிஐடி போலீசார் எடுத்து விசாரிக்க நீதிபதி ஸ்ரீராம் அதிரடி உத்தரவு. ஜீலை 3ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உத்தரவிட்டார். சி.பி.சி.டி இந்த 11 பேரிடமும் விசாரணை நடத்தவுள்ளது. இந்த 11 பேரும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.