ரப்பர் சாலை அமைப்பதற்க்காக வீணாக போன 2.70 கோடி
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் உயர்நீதிமன்ற உத்தரவு படி தரமற்ற ரப்பர் சாலையை அகற்றியதால் மத்திய அரசுக்கு 2.70 கோடி பணம் வீணாகிவிட்டது.
கடந்த ஜீனில் பாம்பன் பாலத்தில் நவீன ரகசாலை அமைப்பதாக கூறி ஜல்லி கற்க்கள் இல்லாமல் தார்,சுண்ணாம்பு,குவாரிகளில் கிடைக்கும் டஸ்ட் போன்றவற்றை பயன்படுத்தி ரப்பர் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையினால் 20க்கும் மேற்ப்பட்ட விபத்துகளில் பலர் படுகாயங்கள் அடைந்தனர், ஒருவர் உயிரிழந்தார். உடனடியாக இந்த ரப்பர் சாலை அகற்ற வேண்டும் என பாம்பன் பொதுமக்கள் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கம் போல் செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்தது அரசு. இதையடுத்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. மாவட்ட ஆட்சியர் மற்றும் நெடுஞ்சாலைதுறை உயர் அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து ரப்பர் சாலை அகற்றப்பட்டது.
இதைபற்றி இப்பகுதி பொதுமக்கள் ஏற்க்கனவே இந்த ரப்பர் சாலை அமைக்கும் போதே எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் அரசு அதிகாரி கண்டுகொள்ளவில்லை. இதனால் பல்வேறு விபத்துக்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன. தற்சமயம் ரப்பர் சாலை அகற்ற ஜே.சி.பி வாகனத்தை வைத்து அகற்றுவதால் மேலும் பாலத்தின் ஸ்திரத்தனமை மேலும் கேள்வி குறியாக உள்ளது.
பாலாஜி.