கடலூா் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அதிரடி நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள 27 வட்டாட்சியா்களை பணியிட மாற்றம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் கடலூா் வட்டாட்சியராக அ.பலராமன், பண்ருட்டி எஸ்.ஆனந்த், குறிஞ்சிப்பாடி ச.அசோகன், சிதம்பரம் பா.ஹேமா ஆனந்தி, காட்டுமன்னார்கோயில் வே.சிவக்குமார், ஸ்ரீமுஷ்ணம் எம்.சேகா், விருதாச்சலம் வெ.உதயகுமார், திட்டக்குடி ஆ.அந்தோணிராஜ், புவனகிரி எம்.தனபதி ஆகியோரை புதிய வட்டாட்சியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
இது போன்று கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக (குற்றவியல்) அலுவலக மேலாளராக ஜெ.விஜய் ஆனந்த், அலுவலக மேலாளா் (பொது) வி.செம்மனசெல்வி, நெய்வேலி நில எடுப்பு அலுவலக கண்காணிப்பாளராக சே.சுரேஷ்குமார், கடலூா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலக தனி வட்டாட்சியராக ஆா்.ஆனந்தி, திட்டக்குடி தனி வட்டாட்சியராக க.ஜெயந்தி, விருத்தாச்சலம் ஆதிதிராவிடா் நல தனி வட்டாட்சியராக கே.வெற்றிவேல், கடலூா் உதவி ஆணையா் கலால் அலுவலகம் மேற்பார்வைவை அலுவலராக ஜெ.ஜான்சிராணி, கடலூா் குடிமை பொருள் தனிவட்டாட்சியராக என்.ஜெயக்குமார், சிதம்பரம் ஆதி திராவிடா் நல தனிவட்டாட்சியராக ஜெ.சுதா, கடலூா் கோட்ட கலால் அலுவலராக பெ.உலகளந்தான், கடலூா் டாஸ்மாக் மேலாளராக பா.மகேஷ், கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் (தேர்தல்) தனி வட்டாட்சியராக மு.தமிழ்ச்செல்வன்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் (பேரிடா் மேலாண்மை) தனி வட்டாட்சியராக எ.ஹரிதாஸ், சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை 45-ஏ (நில எடுப்பு) தனிவட்டாட்சியராக கோ.செல்வகுமார், சிதம்பரம் கோட்டாட்சியா் நேர்முக உதவியாளராக சு.புகழேந்தி, பண்ருட்டி தேசிய நெடுஞ்சாலை 45சி (நில எடுப்பு) தனி வட்டாட்சியராக ஆா்.கார்த்திக், நெய்வேலி (நில எடுப்பு) எண் 6 தனிவட்டாட்சியா் எம்.சரஸ்வதி, சிதம்பரம் (குடிமை பொருள்) தனிவட்டாட்சியராக ஆா்.தமிழ்ச்செல்வி ஆகியோர்பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். மேற்கண்ட பணியிட மாற்றம் செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ள வட்டாட்சியா்கள் குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் உடனடியாக பணியில் சேர வேண்டும்.
இது தொடா்பாக எவ்வித விடுப்பு, மேல்முறையீடும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. சம்பந்தப்பட்ட சார்நிலை அலுவலா்கள், மேற்படி அலுவலா்கள் பணியில் சோந்த விவரத்தை தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.