தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து வரும் நிலையில் இன்று தமிழகம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கைகடற்படை 22 பேரை மூன்று படங்களுடன் சிறை பிடித்து கைது செய்து அழைத்துச் சென்றுள்ளது.
அண்மையில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு அதில் ஒருவருக்கு சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து ராமேஸ்வரம் மீனவர்கள் பல நாள் போராட்டங்களை அறிவித்து நடத்தி இருந்தனர். தமிழக அரசும் இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து கடிதங்கள் எழுதியிருந்தது. இந்நிலையில் தொடர்ச்சியாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரால் சிறை பிடிப்பது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இலங்கை கடற்படை கைது செய்து அழைத்துச் சென்ற 22 மீனவர்களையும் உடனே விடுவிக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.