Published on 31/05/2022 | Edited on 31/05/2022
![21 conditions for new licenses for spas and massage parlors](http://image.nakkheeran.in/cdn/farfuture/uUN0FByGSjjILSVvGkgpiCoXagh4I9ofr7RawRsKXVw/1653964710/sites/default/files/inline-images/87_22.jpg)
ஸ்பா, மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்களுக்கு புதிதாக தொழில் உரிமம் பெற 21 நிபந்தனைகளை சென்னை மாநகராட்சி விதித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கதவுகளை பூட்டியபடி மசாஜ் சென்டர்கள் செயல்படக்கூடாது, அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி இயங்கக்கூடாது உள்ளிட்ட 21 நிபந்தனைகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், சென்னை மாநகராட்சி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், போக்குவரத்துத்துறை, தீயணைப்புத்துறை ஆகிய துறைகள் அடங்கிய குழு ஆய்வு செய்து புதிய உரிமம் அளிப்பார்கள் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.