தமிழகத்தில் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டில் டாஸ்மாக் வருமானம் 45,885.67 கோடி ரூபாய் அதிகரித்திருப்பதாக தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாள் கூட்டம் இன்று (21.06.2024) காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று சட்டப்பேரவையில் மாலை நடைபெற்று வருகிறது. இதன் மூலமாக ஆயத்தீர்வை துறைக்கு கீழ் இருக்கக்கூடிய டாஸ்மாக் நிறுவனத்தின் மூலமாக தமிழக அரசுக்கு கிடைத்திருக்க கூடிய வருவாய் தொடர்பான பட்டியல் தற்போது கிடைத்திருக்கிறது. அதன் அடிப்படையில் கொள்கை விளக்க குறிப்பில் கிடைத்துள்ள தகவலின்படி 2023-24 ஆம் ஆண்டில் டாஸ்மாக் வருமானம் 45,855.67 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்தாண்டை விட 1734.54 கோடி ரூபாய் கூடுதலாக டாஸ்மாக் வருமானம் கிடைத்துள்ளது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.
Published on 21/06/2024 | Edited on 21/06/2024