![kali](http://image.nakkheeran.in/cdn/farfuture/qyEeBRHaiJE0RzZ5xjp3KI-_X2MUrophAV2EAzCrymM/1533709466/sites/default/files/inline-images/kali_0.jpg)
77 ஆண்டுகளாக வெளிவரும் முரசொலி நாளிதழில் கலைஞரின் கண்ணில் படாமல் வெளிவந்த முதல் நாளிதழ் ஆகும்.
திமுக தலைவர் கலைஞர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், நேற்று மாலை 6.10 மணி அளவில் கலைஞர் காலமானார்.
இதனையடுத்து, கலைஞரின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
![ssd](http://image.nakkheeran.in/cdn/farfuture/RPzbB0Y263ayjATXANgi4UKVa1lswVWXKHbln_AU_Lc/1533709908/sites/default/files/inline-images/WhatsApp%20Image%202018-08-08%20at%2004.43.28.jpeg)
கலைஞரின் உடல் கோபாலபுரம் இல்லத்தில் இறுதி மரியாதை செலுத்தப்பட்ட பிறகு கனிமொழியின் சிஐடி காலனி வீட்டுக்கு ஆம்புலன்சில் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது ஏராளமான தொண்டர்கள் ஆம்புலன்சின் முன்னும் பின்னும் கட்சிக் கொடிகள் ஏந்தியபடி கண்ணீருடன் நடந்து சென்றனர். அங்கு அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் இன்று (புதன்கிழமை) காலை 5 மணிக்கு அங்கிருந்து கலைஞர் உடல் ராஜாஜி ஹாலில் எடுத்துவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. அப்போது, கலைஞர் உடலின் அருகில் முரசொலி நாளிதழ் வைக்கப்பட்டு எடுத்து வரப்பட்டது.