
தமிழ்நாட்டில் இன்று (21/05/2022) நடைபெற்ற குரூப் 2 தேர்வை சுமார் 1.83 லட்சம் பேர் எழுதவில்லை என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேர்முகத் தேர்வுள்ள 116 குரூப் 2 பதவியிடங்கள், நேர்முகத் தேர்வற்ற 5,413 குரூப் 2ஏ இடங்கள் என மொத்தம் 5,529 இடங்களுக்கு தேர்வை நடத்தியது. 4,012 மையங்களில் தேர்வு நடைபெற்ற நிலையில், காலை 09.00 மணி முதலே தேர்வர்கள் மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
சில இடங்களில் 09.00 மணிக்கு பின் வந்தவர்கள் மையங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை. சென்னையில் காலதாமதமாக வந்தவர்கள் தேர்வு மைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேனியில் காலை 09.00 மணிக்கு பிறகே தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டதால், குழப்பம் ஏற்பட்டது. இந்த தேர்வை எழுத 11.78 லட்சம் பேர் ஹால்டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்த நிலையில், 1.83 லட்சம் பேர் தேர்வை எழுதவில்லை என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.