Skip to main content

18 எம்எல்ஏக்களும் எடப்பாடி பக்கம்வர தயார்: அமைச்சர் பேச்சு

Published on 20/06/2018 | Edited on 20/06/2018
M. C. Sampath



காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் அதிமுக சார்பில் கடலூர் மாவட்டம், பாதிரிக்குப்பத்தில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எம்.சி.சம்பத் கலந்து கொண்டார்.

 

 

 

கூட்டத்தில் பேசிய அமைச்சர் எம்.சி.சம்பத், 
 

காவிரி விவகாரத்தில் தி.மு.க. செய்யாததை அ.தி.மு.க. செய்து காட்டி உள்ளது. பல்வேறு காலக்கட்டங்களில் காவிரி உரிமையை மீட்டு எடுக்க ஜெயலலிதா தொடர்ந்து போராடினார். அவரது வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டு வருகின்றனர்.
 

புதிதாக கட்சி ஆரம்பித்துள்ளவர்கள் காணாமல் போய் விடுவார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு நடிகர்கள் யாரும் நாட்டை ஆள முடியாது. தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள 18 எம்.எல்.ஏ.க்களும் எங்கள் பக்கம் வர தயாராக இருக்கிறார்கள். இரட்டை சிலை சின்னத்தை எதிர்த்து யாரும் வெற்றி பெற முடியாது. அ.தி.மு.க.
ஒரு மாபெரும் இயக்கம்.

 

 

 

ஜெயலலிதா அடையாளம் காட்டியதால் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் அந்த உறுப்பினர் (கலைச்செல்வன்) வெற்றி பெற்றார். அவருக்காக மக்கள் வாக்களிக்கவில்லை. அதேபோல் நான் வெற்றி பெற்றதும் ஜெயலலிதாவுக்கு மக்கள் போட்ட ஓட்டுகள் தான்.

 

 


அவர்கள் (தினகரன் அணி) எந்த தேர்தலில் நின்றாலும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும். எங்களுக்குள் சிறு, சிறு பிரச்சினை இருந்தாலும், அது சரியாகி விடும். எந்த சூழ்நிலை வந்தாலும், உள்ளாட்சி, பாராளுமன்ற தேர்தல் வந்தாலும் நாங்கள் இரட்டை இலை சின்னம் இருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் களம் காண்போம். இவ்வாறு பேசினார்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்