
தமிழகத்தில் மேலும் 18 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த சீதாலட்சுமி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை இணை ஆணையராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிறப்பு செயலாக்கத்துறையின் முதன்மைச் செயலாளராக விபு நாயர், சமூக சீர்திருத்தத்துறையின் முதன்மைச் செயலாளராக மங்கத் ராம் சர்மா ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்ட ஆட்சியராக கோபால சுந்தரராஜ், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக சந்திர கலா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த கண்ணன் இந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையராகவும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த மகேஸ்வரி வேளாண் மற்றும் உழவர் நலத்துறை இணை செயலாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வணிக வரித்துறையின் இணை ஆணையராக சங்கர் லால் குமாவாட், சமூக பாதுகாப்புத்துறை இயக்குநராக வளர்மதி, ஓசூர் உதவி ஆட்சியராக நிஷாந்த் கிருஷ்ணா, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல்துறை மற்றும் கழிவு நீரகற்று வாரிய நிர்வாக இயக்குநராக ஆகாஷ், தமிழ்நாடு (Fibernet) கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக கமல்கிஷோர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.