Published on 24/01/2019 | Edited on 24/01/2019

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலைக்காகவும், 28 ஆண்டுகால சிறைவாழ்வை முடிவுக்கு கொண்டுவரவும் அற்புதம்மாள் தமிழகம் தழுவிய சுற்றுப்பயணத்தை இன்று மாலை கோவையில் துவங்குகிறார். இதற்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டு கேட்டுக்கொண்டுள்ளார்.

வீடியோவில், பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ் ஆகிய 7 பேரும் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இந்த ஏழு பேரையும் விடுதலை செய்வதற்காக கோவையில் தொடங்கி தமிழ்நாடு முழுக்க பயணிக்க இருக்கிறார் அற்புதம்மாள் அவர்கள். அற்புதம்மாளுக்கு நாம் துணை நின்று எழுவர் விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி. வணக்கம் என்று கூறியுள்ளார்.