Skip to main content

16 வயது சிறுமிக்கு வன்கொடுமை! - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது வழக்குப்பதிவு!

Published on 24/06/2022 | Edited on 24/06/2022
16 year old girl got torture ! - Case against three in a family!

 

சட்டம் என்னதான் கடுமை காட்டினாலும், ஒருசில கிராமங்களில் தீண்டாமை தலைவிரித்தாடவே செய்கிறது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தாலுகா, சொக்கனேந்தல் கிராமத்திலும் 16 வயது சிறுமிக்கு எதிராக வன்கொடுமை நடந்திருக்கிறது. 

 

பட்டியலினத்தைச் சேர்ந்த அச்சிறுமி காலை 10-30 மணியளவில் கடைக்குச் சென்றபோது, வேறொரு பிரிவைச் சேர்ந்த அருண்பாண்டி எனும் நபர் பின்தொடர்ந்து வலுக்கட்டாயமாக அச்சிறுமியின் கையைப்பிடித்து இழுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவனிடம் இருந்து தப்பிய அச்சிறுமி வீட்டுக்குச் சென்று தனது அண்ணன் பிரகாஷ்ராஜிடம் அழுதபடியே நடந்ததைச் சொல்லியிருக்கிறார். 

 

உடனே, பிரகாஷ்ராஜ் அருண்பாண்டியிடம் இது குறித்து கேட்டுள்ளார். அப்போது அருண்பாண்டி, சாதியைச் சொல்லித் திட்டியபடி பிரகாஷ்ராஜை அடித்திருக்கிறார். அருண்பாண்டியனின் தந்தை ராஜாங்கமும் பிரகாஷ்ராஜை தாக்க, அருண்பாண்டியனின் அக்கா பஞ்சு, சிறுமியின் கன்னத்தில் அறைந்து, தலைமுடியைப் பிடித்து இழுத்து ‘என் தம்பி சொல்றத கேட்கலைனா.. உங்க வீட்டுக்கு தீ வைத்து குடும்பத்தோடு கொளுத்திருவோம்’ என்று கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.  

 

இதுகுறித்து அந்தச் சிறுமி காரியாபட்டி எ.முக்குளம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர், அருண்பாண்டி, ராஜாங்கம், பஞ்சு ஆகிய மூவர் மீதும் போக்சோ மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்