மருத்துவ கல்லூரி மாணவர்கள் 13-வது நாளாக முற்றுகை போராட்டம்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கட்டுபாட்டில் உள்ள ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரியை எம்.ஜி.ஆர். மருத்துவ கல்லூரி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து அரசு மருத்துவ கல்லூரியில் வசூலிக்கும் கட்டண தொகையே வசூலிக்க வேண்டும் என்று கடந்த 30ஆம் தேதி முதல் 13 நாட்கள் மருத்துவ கல்லூரி மாணவர்கள் பல்வேறு விதங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நிர்வாகம் இது குறித்து வழக்கு நீதி மன்றத்தில் உள்ளது போராட்டத்தை கைவிடுங்கள் என்று கேட்டுகொண்டது. இதனை ஏற்காத மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவர்களின் போராட்டத்தை வலுவிழக்க செய்யும் விதமாக போராட்டத்தின் 8ஆம் நாளில் மருத்துவ கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டு மாணவர்களை அப்புறபடுத்த முற்பட்டனர். மாணவர்கள் எங்களுக்கு முடிவு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மாணவர்கள் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர் முற்றுகை, இரத்ததான போராட்டம், உண்ணாவிரத போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டம், என போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதனை தொடர்ந்துமருத்துவ கல்லூரி செவ்வாய் கிழமை திறக்கப்பட்டது. மாணவர்கள் கல்லூரிக்கு செல்லாமல் மருத்துவகல்லூரி முதல்வர் அறையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மாணவர்கள் தொடர்ந்து 13 நாட்கள் போராட்டம் நடத்தி வருவது பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பரபரபாக உள்ளது.
-காளிதாஸ்