ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த கருமாண்டிசெல்லிபாளையம், காஞ்சிக்கோயில் ரோடு, தாய் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி நாகமணி. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். 2வது ஆண் குழந்தை ஆகாஷ் (11 மாதம்) சதீஷ்குமார் பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று இரவு நாகமணி முதல் மகன் டியூசன் படிக்கும் முதல் மகனை கூப்பிட சென்று விட்டார். வீட்டில் சதீஷ்குமார் மற்றும் 11 மாத ஆண் குழந்தை ஆகாஷ் மற்றும் இருந்தனர். சதீஷ்குமார் அலுப்பில் தூங்கிவிட்டார். 11 மாத குழந்தை ஆகாஷ் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது வீட்டில் 20 லிட்டர் தண்ணீர் பிடிக்கும் வாளி இருந்துள்ளது. அந்த வாளியில் தண்ணீரும் இருந்துள்ளது. அப்போது ஆகாஷ் வாளியை பிடித்து எழுந்து நிற்க முயன்று உள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக குழந்தை ஆகாஷ் வாளிக்குள் தவறி விழுந்து விட்டான். இதை யாரும் கவனிக்கவில்லை. டியூசனுக்கு சென்று தனது முதல் மகனை அழைத்து வந்த நாகமணி வீட்டிற்குள் வந்துள்ளார்.
அப்போது வீட்டில் குழந்தை ஆகாஷ் தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் கூச்சலிட்டதைக் கேட்டு சதீஷ்குமார் பதறி அடித்துக்கொண்டு ஓடி வந்தார். பின்னர் பெற்றோர் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக கருமாண்டிசெல்லிபாளையத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதைக் கேட்டு பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து பெருந்துறை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து 11 மாத ஆண் குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.