திருச்சி கோட்டை அருங்காட்சியகத்தில் சிலைகள் திருடப்பட்ட வழக்கில் 10 வது குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், " திருச்சி கோட்டை அருங்காட்சியகத்தில் கடந்த 2009 ம் ஆண்டு 31 சிலைகள் திருடப்பட்டன. இது தொடர்பாக தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்யப்பட்டது. இவ்வழக்குத் தொடர்பாக 9 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 21 பஞ்சலோக சிலைகள் மீட்கப்பட்டது. அதேவேளையில் இந்த வழக்கில் தொடர்புடைய 10வது கடைசி குற்றவாளியை தேடி வரப்பட்டது.
இந்நிலையில் தேடப்பட்டு வந்த காரைக்குடி நெற்புகை பட்டியைச் சேர்ந்த வீரப்பன் மகன் சரவண பெருமாள் (வயது 40) கடந்த சில ஆண்டுகளாக சிங்கப்பூரில் தலைமறைவாக இருந்து தெரியவத்து கண்காணித்து வந்தோம், சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்குவருவது தெரிந்து
திருச்சி சிலை தடுப்பு போலீஸ் டி.எஸ்.பி.கதிரவன் தலைமையிலான போலீசார் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் காத்திருந்தோம், நாங்கள் எதிர்ப்பார்த்தது போல வந்த வீரப்பனை சுற்றிவளைத்து கைது செய்து கும்பகோணம் உள்ள நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தியுள்ளோம்". என்றனர்.
இதனையடுத்து சரவண பெருமாளை வருகிற 17 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடரந்து போலீசார் பலத்த பாதுகாப்புடன் திருச்சி சிறையில் அடைத்துள்ளனர்.