போக்குவரத்துக்கு வழி இல்லாமல் மாணவர்கள் எப்படி தேர்வு எழுத வர முடியும்? என அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் ஆளும் கட்சியான அ.தி.மு.க.வின் தோழமை கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் ஈரோடு யுவராஜா.
அவர் மேலும் கூறுகையில், "தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக அதை தடுக்கும் பொருட்டு நாளை 24 .3 .2020 செவ்வாய்கிழமை மாலை முதல் தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் பள்ளிக் கல்வி துறை அறிவித்துள்ளபடி 26.3.2020 அன்று பதினொன்றாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் என உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிராமபுற மாணவர்களும் மாவட்ட எல்லை அருகில் உள்ள மாணவர்களும் பள்ளிக்கு வர இயலாது. எனவே தமிழக அரசு பதினொன்றாம் வகுப்பு பொது தேர்வை உடனடியாக தள்ளி வைக்குமாறு த.மா.கா இளைஞர் அணி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்" என கூறினார்.