Published on 24/01/2024 | Edited on 24/01/2024
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சியில் ‘0’ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக அதிகாலையில் பனியின் தாக்கமானது அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதிகளில் உறை பணி சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் வெப்பநிலையின் அளவு 2 டிகிரி செல்சியஸை ஒட்டியே உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் ‘0’ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக தலைகுந்தாவில் ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், உதகை தாவரவியல் பூங்காவில் 2.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.