2019ஆம் ஆண்டு இந்திய அளவில் அதிகமாக பேசப்பட்ட தலைவர்கள் பட்டியல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதாவது இந்திய அளவில் அதிக சவால்களை எதிர்கொண்ட தலைவர்கள், சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்ட தலைவர்கள், பயன்பாட்டாளர்கள் அதிகம் பயன்படுத்திய ஹேஸ்டேக்குகள், மக்களால் அதிகம் கவனிக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியவர்கள் என்று இந்திய அளவில் இந்த வருடம் இடம்பெற்றிருக்கும் டாப்10 தலைவர்கள் பட்டியல் சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது. அதில், முதல் இடத்தில் அமித்ஷாவும், இரண்டாவது இடத்தில் ராகுல் காந்தியும், மூன்றாவது இடத்தில் பிரதமர் மோடியும் இடம் பெற்றுள்ளனர். மீதமுள்ள இடங்களில் ஜெகன் மோகன் ரெட்டி, உத்தவ் தாக்கரே, ப.சிதம்பரம், யோகி ஆதித்யநாத், மம்தா பானர்ஜி, நிர்மலா சீதாராமன் மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த ஆண்டில் காஷ்மீரின் 370 பிரிவு நீக்கம், முத்தலாக் சட்டம், குடியுரிமை மசோதா என பல்வேறு மசோதாக்களை கொண்டுவந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா பெயர் அரசியல் கட்சியினர் மத்தியில் மட்டுமில்லாமல் சமூக வலைத்தளங்களிலும் இவருக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல கருத்துக்கள் வந்தன. அதனால் முதலிடத்தில் அமித்ஷா பெயர் வர காரணம் என்று கூறிவருகின்றனர். அதே போல் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் வேலைவாய்ப்பின்மை காரணங்களால் நிர்மலா சீதாராமன் பெயர் அதிக அளவு சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. இதன் காரணமாக ஐவரும் இந்த வருட டாப் 10 பட்டியலில் இடம்பெற்றதாக சொல்கின்றனர். மேலும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்த நிகழ்வும் இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.