அதிமுக பொன்விழா ஆண்டு பொதுக் கூட்டத்தில் முன்னாள் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்று பேசுகையில், ''இவ்வளவு கூட்டம் கூடி உள்ளீர்கள். இவர்களை பார்த்து 200, அல்லது 300 பேர் என்று சொல்ல முடியாது. ஆயிரம் பேர் கூடி உள்ளீர்கள் என்று சொல்லலாம். இங்கு பத்தாயிரம் பேர் கூட கூடி இருக்கலாம். ஆனால் ஆயிரம் பேர் என்று சொல்வார்கள். ஆயிரம் என்று கண்ணில் பார்த்தாலே ஸ்டாலினுக்கு தூக்கம் வராது. எடப்பாடி பழனிசாமி தெளிவாக பேசுகிறார். ஒரு வாரத்திற்கு முன்னால் மு.க.ஸ்டாலினை தலைவராக தேர்ந்தெடுக்கக்கூடிய நிகழ்ச்சி சென்னையில் அறிவாலயத்தில் நடந்தது.
அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார் இரண்டாவது முறையாக. அதற்கு பெரிய பாராட்டுக்கள், வழக்கம்போல அவர் தந்தை பிறந்த இடத்தில், நினைவாலயம் என எல்லா இடத்திலும் மலர்வளையம் வைக்கிறார். வைத்துவிட்டு எல்லாரையும் பார்த்து பேசுகிறார். நான் காலையில் எழும்பொழுது நிம்மதியாக இருந்ததே கிடையாது, எனக்கு தூக்கமே வருவதில்லை, தோழர்கள் நீங்கள் அடித்துக் கொள்வது எனக்கு முடியவில்லை, ஒழுக்கமற்ற, நியாயமற்ற செயலாக திமுக தோழர்கள் இருப்பது எனக்கு பயமாக இருக்கிறது, இந்த ஆட்சிக்கு ஆபத்து வந்து விடுமோ என்று பயப்படுகிறேன் என்று ஸ்டாலின் பொதுக்குழுவில் பேசிய செய்தி பத்திரிகையில் வந்தது. ஆனால் ஒரு வாரத்திற்கு முன்பு நான் சாட்டை எடுக்க வேண்டி வரும், சர்வாதிகாரியாக மாறுவேன் என்றெல்லாம் வீராப்பு பேசிய ஸ்டாலின் இன்றைக்கு திமுக தொண்டர்களை பார்த்து கெஞ்சுகிறார். என்னைக் காப்பாற்றுங்கள், இந்த கட்சியைக் காப்பாற்றுங்கள் என்று சொல்கிறார்'' என்றார்.