Published on 25/06/2019 | Edited on 25/06/2019
சமீப காலமாக தங்க தமிழ்ச்செல்வன், தினகரன் மீதும் அமமுக மீதும் கடும் அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தங்க தமிழ்ச்செல்வன், நாடாளுமன்ற தேர்தல் தோல்வியால் நானும், எனது குடும்பமும் பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் ரொம்ப பாதிக்கப்பட்டோம் என்று கூறினார். மேலும் அதிமுக ஆட்சியை முதல் முறையாக பாராட்டியும் பேசியிருந்தார். அதில் இந்த ஆட்சி பிளாஸ்டிக்கை ஒழித்தது நல்ல செயல் என்றும் கூறினார். இதனால் தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணையப்போகிறார் என்ற தகவல் வந்தது.

நேற்று தினகரனை திட்டுவது போல் சமூக வலைத்தளங்களில் ஆடியோ ஒன்று தமிழகம் முழுவதும் பரவியது. இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தங்க தமிழ்ச்செல்வனின் குடும்பம் கொடுத்த அழுத்தத்தினால் தான் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர். இதனையடுத்து தினகரன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, தங்க தமிழ்ச்செல்வனை வெகு விரைவில் அமமுகவின் அனைத்து பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார் என்று தெரிவித்தார்.