நான்கு தொகுதிகளின் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து 13-ந் தேதியிலிருந்து 26-ந் தேதி வரை 4 நாள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார் தேமுதிக பிரேமலதா.
![Vijayakanth - Premalatha](http://image.nakkheeran.in/cdn/farfuture/A7zrq2vTrPXC3Ld2r5L3yT61IJtJ_a_dzWXlyjiSoEE/1557226790/sites/default/files/inline-images/dmdk%2091.jpg)
விஜயகாந்தின் உடல்நிலையை காரணம் காட்டி பிரச்சாரத்தினை தவிர்க்கச் சொல்லி பிரேமலாதவிற்கு அறிவுறுத்தியிருந்தனர் விஜயகாந்தின் குடும்ப மருத்துவர்கள். இதனால், பிரச்சாரத்திற்கு பிரேமலதா செல்வது சந்தேகம் என தேமுதிக நிர்வாகிகளிடம் பரவியிருந்த நிலையில், பிரச்சாரத்திற்கு செல்வதென முடிவு செய்திருக்கிறார் பிரேமலதா.
மருத்தவர்களின் அறிவுறுத்தலை, விஜயகாந்திடம் பிரேமலதா விவரித்திருக்கிறார். அப்போது, "என் உடல்நலத்தை முன்னிறுத்தி பிரச்சாரத்தை தவிர்க்க வேண்டாம். அவசியம் நீ பிரச்சாரத்திற்கு செல்ல வேண்டும்" என விஜயகாந்த் வலியுறுத்தியதை தொடர்ந்தே பிரச்சாரப் பயணத்தை திட்டமிட்டிருக்கிறார் பிரேமலதா.
நான்கு நாள் பிரச்சாரப் பயணத்தின் விபரங்கள், இடைத்தேர்தல் நடக்கும் மாவட்டங்களின் தேமுதிக செயலாளர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார் சுதீஷ். தொகுதியில் எந்தெந்த இடத்தில் பிரேமலதா பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதை அதிமுக தலைமையிடம் ஆலோசித்து முடிவு செய்யும் பணியில் குதித்துள்ளனர் தேமுதிக மாவட்ட நிர்வாகிகள்.