ஊரடங்கு விவகாரத்தில் எடப்பாடி அரசை டெல்லி வார்ன் பண்ணியிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இது பற்றி விசாரித்த போது, தமிழகத்தில் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகதாரத்துறையினர், காவல்துறையினர் மற்றும் ஊடகத்துறையினர் என்று பல தரப்பினரும் கரோனா தொற்றுக்கு ஆளானதைப் பார்த்து மத்திய பாஜக அரசு ஷாக் ஆகியிருக்கிறது. அதே நேரத்தில், சென்னையிலேயே ஊரடங்கை சரியாகப் பின்பற்றவில்லை .
அதோடு, கடற்கரைப் பகுதிகளில் மீன் வாங்கவும், காற்று வாங்கவும் மக்கள் கூடுகிறார்கள் என்று மத்திய உளவுத்துறை ரிப்போர்ட்டைக் கொடுத்ததோடு, திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, ராஜேந்திர பாலாஜி, உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் பொது நிகழ்ச்சிகளில் கூடிய நிகழ்வுகளையும், படங்களையும் சேகரித்து டெல்லிக்கு அனுப்பியிருக்கிறது. இதுதான் வார்ன் பண்ண காரணம் என்று சொல்லப்படுகிறது. சென்னை அண்ணாசாலை முதல், தமிழகத்தின் முக்கியச் சாலைகள் பலவும் அதிரடியாக மூடப்பட்டிருப்பதற்கும், ஊரடங்குக்குள்ளேயே இன்னொரு ஊரடங்கை நடைமுறைப்படுத்துறதுக்கும் இதுதான் பின்னணி. அமைச்சர்களும் எச்சரிக்கப்பட்டிருப்பதாகச் சொல்கின்றனர்.