



Published on 22/02/2019 | Edited on 22/02/2019
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக-விசிக கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியது. விசிக சார்பில் திருமாவளவன், ரவிக்குமார் உள்ளிட்டோர் கூட்டணி பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். திமுக சார்பில் துரைமுருகன், பொன்முடி, ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
திமுக கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.