




Published on 28/04/2019 | Edited on 28/04/2019
தி.மு.க. முன்னாள் எம்.பி. வசந்தி ஸ்டான்லி (வயது 56), சனிக்கிழமை காலமானார்.
உடல்நல குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் வசந்தி ஸ்டான்லி நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். சென்னை ராயப்பேட்டையில் லாய்ட்ஸ் காலனி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் வசந்தி ஸ்டான்லி. பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தி.மு.க. சார்பில் கடந்த 2008ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தார்.