Published on 01/05/2019 | Edited on 01/05/2019

இன்று மே தினத்தை முன்னிட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை, எழும்பூரில் மே தின கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அதன்பின் அவர், தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதால்தான் 3 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய அதிமுக திட்டமிட்டுள்ளது. முத்தரசன் தவறாக ஏதும் பேசவில்லை, ஆனால் பாமக ராமதாஸ் தவறான அறிக்கை அளித்துள்ளார்.