

Published on 24/06/2020 | Edited on 24/06/2020
அரசியல் தலைவர்கள் பெயரில் சமூக வலைதளங்களில் போலி அக்கவுண்ட்டுகள் துவக்கி சம்மந்தப்பட்ட தலைவர்களின் நற்பெயர்களுக்கு களங்கம் விளைவிக்கும் சைபர் க்ரைம் கும்பல்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றனர்.
அந்த வகையில், மதிமுக தலைவர் வைகோவின் பெயரில் சில விஷமிகள் போலி அக்கவுண்ட் உருவாக்கியிருக்கின்றனர். வைகோ நாயுடு என்கிற பெயரில் போலி அக்கவுண்ட் உருவாக்கியுள்ளனர். இதனை அறிந்து அதிர்ச்சியடைந்தார் வைகோ. இதனையடுத்து வைகோ சார்பில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மீது சைபர் க்ரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.