கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், சசிகலா சிறையில் இருந்து வந்த பின்னர் அதிமுகவில் பெரிய அளவில் மாற்றம் வரும் என்று சொல்வது அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். சட்ட ரீதியாக அவர் வெளியே வருவாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது. காரணம் சிறையில் அவர் நன்னடத்தையோடு செயல்படவில்லை என தெரிய வந்துள்ளது.
தவறுகள் செய்துள்ள அவருக்கு கூடுதல் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அவர் எப்போது வந்தாலும் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இனி இக்கட்சியில் அவருக்கு எந்த விதமான வாய்ப்பும் இல்லை. நடை சாத்தப்பட்டுவிட்டது. வந்தால் அவர்கள் வெளியே நின்று வெளியே நின்று கும்பிட்டுவிட்டு செல்ல வேண்டியதுதான். இவ்வாறு கூறினார்.
மேலும் பேசிய அவர், வரும் 4ஆம் தேதி கிருஷ்ணகிரியில் புதிய மருத்துவக் கல்லூரிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்ட இருக்கிறார் என தெரிவித்தார்.