Skip to main content

ரஜினியை தொடர்ந்து ஸ்டாலின் ட்வீட் டிவிட்டரில் இருந்து நீக்கம்? சர்ச்சையை ஏற்படுத்தியதா? அதிமுக அமைச்சரின் பதில்!

Published on 24/03/2020 | Edited on 24/03/2020

இந்தியாவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 பேர் ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 492 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு மாநில அரசுகளும் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர். அந்த வரிசையில் தமிழகத்திலும் இன்று (24/03/2020) மாலை அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் அரசு அறிவித்த 144 தடை உத்தரவும் இன்று மாலை 06.00 மணி முதல் அமலுக்கு வருகிறது.இதனால் தமிழகத்தில் உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களும் அரசின் அறிவுறுத்தலின் பேரில் ஊழியர்களுக்கு விடுப்பு, வீட்டில் இருந்தே பணிபுரிய ஊழியர்களுக்கு அனுமதி அளித்துள்ளனர். 

  dmk



இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸால் 9 பேர் உயிரிழப்பு; 8000 பேருக்கு பாதிப்பு, சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களைத் தனிமைப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல் ஆகியவை மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே தமிழக அரசு மக்களுக்கு நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளில் முழுவீச்சில் ஈடுபட வேண்டும்.' எனக் கூறப்பட்டு இருந்தது. இந்த பதிவிற்கு அதிமுக அமைச்சர் வேலுமணி தன் டிவிட்டர் பக்கத்தில் 'தமிழகத்தில் கொரோனாவால் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 9 பேர் இறந்ததாக திமுக தலைவர் ட்விட்டரில் வதந்தி பதிவு செய்து நீக்கியுள்ளது, பதற்றம் உண்டாக்கும் முயற்சியா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. சுகாதார பேரிடர் தகவல் பரிமாற்றத்தை குறிப்பாக தலைவர்கள் மிகவும் கவனமுடன் கையாள வேண்டும்!' எனத் தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்