Skip to main content

புரட்சி பாரதம் மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு

Published on 10/03/2021 | Edited on 11/03/2021

 

TN ASSEMBLY ELECTION ADMK ALLIANCE

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை மறுநாள் (12/03/2021) தொடங்க உள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்கும் பணியில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

அதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஏற்கனவே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு, ஒப்பந்தமும் கையெழுத்தானது. அதன் தொடர்ச்சியாக, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் போட்டியிடும் தொகுதிகள் இறுதியானது. அதைத் தொடர்ந்து, தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், பா.ம.க., பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தனித்தனியே அறிவிக்கப்பட்டன.

 

இந்த நிலையில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பா.ம.க.வுக்கு 23 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 10 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பா.ம.க. வெளியிட்டுள்ளது. அதேபோல் அ.தி.மு.க. தலைமை ஏற்கனவே 6 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு இருந்த நிலையில், இன்று (10/03/2021) 171 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

 

அதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க. தலைமை தங்களது கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி, என்.ஆர். தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த கட்சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறது. அதேபோல், ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எழும்பூர் (தனி) சட்டமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

 

மேலும், பூவை ஜெகன்மூர்த்தியின் புரட்சி பாரதம் கட்சிக்கு வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதியும், ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்திற்கு கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியும் இறுதி செய்யப்பட்டு, தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றன. 

 

 

 

சார்ந்த செய்திகள்