Skip to main content

நிலக்கோட்டை தொகுதி  ஆளும் கட்சிக்கு சாதகமாக இல்லை!  எடப்பாடியை டென்ஷன் ஆக்கிய உளவுத்துறை ரிப்போர்ட்

Published on 26/04/2019 | Edited on 26/04/2019


 


கடந்த 18 ம் தேதி நடந்த பாராளுமன்ற தேர்தலில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும்  நடைபெற்றது.   இந்த இடைத்தேர்தல் முடிவுகள் எந்த அளவுக்கு ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருக்கிறது என்பதை உளவுத்துறையும் முதல்வர் எடப்பாடிக்கு ரிப்போர்ட் அனுப்பி இருக்கிறது. அதில் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இல்லை என உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது.  அதை கண்டு எடப்பாடி டென்ஷனாகி விட்டாராம்.  உடனே அமைச்சர் தங்கமணி மூலமாக தொகுதியின் நிலவரங்களை கேட்டு ரிப்போர்ட் கொடுக்கும்படி கோரியிருக்கிறார்.  அதனடிப்படையில் தங்கமணியும் மாவட்ட செயலாளருடன்  நகர ஒன்றிய பொறுப்பாளர்களிடம்  தீவிர விசாரணை செய்து இருப்பதைக் கண்டு பொறுப்பில் உள்ள ர.ர.க்கள் அரண்டு போயிருக்கிறார்கள்.

 

e

   

 இது சம்பந்தமாக மாவட்ட பொறுப்பில்  உள்ள சில ர.ர.க்களிடம் கேட்டபோது... நிலக்கோட்டை தொகுதி அதிமுக கோட்டையாக இருந்தாலும்  டிடிவி பிரிந்ததின் பேரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில்  போட்டியிட்ட தங்கத்துரையின் சின்னமான பரிசு பெட்டிக்கும் இரட்டை இலை ஓட்டுகள்  சிதற போகிறது என்பது நாளையே தான் தொகுதியை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அமைச்சர் தங்கமணி மூலம் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய சொல்லி எடப்பாடி அனுப்பி வைத்தார் .  

 

அதன் அடிப்படையில் தொகுதிக்கு 40 கோடியும் வந்தது. அந்த பணத்தில் ஒன்றரை லட்சம் வாக்காளர்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய்யும்.பூத் செலவுக்கும்  பிரித்து கொடுங்க என அமைச்சர் தங்கமணி சொல்லிவிட்டு போய்விட்டார்.  அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகமும் தொகுதியில் உள்ள நகரம். ஒன்றிய பொறுப்பாளர்கள் மூலமாக ஊராட்சி செயலாளர்கள் மற்றும் கிளை செயலாளர்கள் மூலம் அந்தந்தப் பகுதியிலுள்ள ஓட்டுகளுக்கு தலா இரண்டாயிரம் வீதம் பிரித்து கொடுத்தனர்.


 இப்படி தொகுதியில் உள்ள நிலக்கோட்டை ஒன்றியம் வத்தலகுண்டு ஒன்றியத்தில் உள்ள 252 பூத்துகளில் வாக்களிக்கும் மக்களுக்கு 80% வரை தலா இரண்டாயிரம் ரூபாய் வீதம் பணம் பட்டுவாடா செய்ய சொல்லி கொடுத்திருந்தனர்.  ஆனால் அந்தந்த பகுதியில் உள்ள பெரும்பாலான பொறுப்பிலுள்ள கட்சிக்காரர்கள் பெயரளவில் மட்டும் வாக்காளர்களுக்கு தலா இரண்டாயிரம் வீதம் கொடுத்துவிட்டு மீதியை சுருட்டிக் கொண்டனர்.  இதன் மூலம் தொகுதியில் உள்ள கட்சிப் பொறுப்பாளர்கள் பெரும்பாலானோர் இரண்டு லட்சம் முதல் பத்துலட்சம் வரை வாக்காளர்களுக்கு கொடுக்க சொன்ன பணத்தை சுருட்டி இருக்கிறார்கள் என்ற விஷயம் வெளிப்படையாகவே தெரிந்தது.  அப்படியிருந்தும் தேர்தல் பணியையும் சரிவர செய்யவில்லை. 

pr

 

தேர்தலுக்கு முதல் நாள் இரவு திமுக சார்பில் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டது.  அதை தடுக்க கட்சிக்காரர்கள் ஆர்வம் காட்டவில்லை.  அதுபோல் பூத்துக்கு சென்ற கட்சிக்காரர்களும் கூட மொத்த ஓட்டில் எத்தனை  ஓட்டுகள் பதிவாகி உள்ளது என்ற விவரம் அடங்கிய 17 C படிவத்தை கூட பெரும்பாலான கட்சிக்காரர்கள்  தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டு வாங்கி வரவில்லை.   இதனால் ஒவ்வொரு பூத்துகளிலும் எத்தனை ஓட்டுகள் பதிவாகி உள்ளது என்ற விவரங்களும் மாவட்ட கழகத்திற்கு  சரிவர கொடுக்காமல் பெயருக்கு பூத்துக்கு போய் வந்து இருக்கிறார்கள்.   அது எல்லாம் வைத்து பார்க்கும்போது தான் நிலக்கோட்டை தொகுயை மீண்டும் தக்க வைக்க முடியுமா? என்ற சந்தேகமும் ஒரு புரம் இருந்து வந்தது.

 

t


 இந்த  நிலையில்தான் முதல்வர் எடப்பாடிக்கு உளவுத்துறை அனுப்பிய ரிப்போர்ட்டிலும் இத் தொகுதி அதிமுகவுக்கு சாதகமாக இல்லை என தெரிவித்து இருக்கிறார்கள்.  அதைக் கண்டு முதல்வர் எடப்பாடி டென்ஷனாகிவிட்டார்.  உடனே  அமைச்சர் தங்கமணி மூலமாக ஒரு குழுவை தொகுதிக்கு அனுப்பி ஆய்வு செய்யச் சொல்லியிருக்கிறார்.   அதன் அடிப்படையில்தான்  ஓட்டுக்கு கொடுத்த பணத்தை கட்சிக்காரர்கள் சரி வர கொடுக்காமல் ஏமாற்றிவிட்ட விஷயமும் கட்சிக்காரர்கள் தேர்தல் பணியில்  சரிவர ஆர்வம் காட்டாமல் இருந்த விஷயமும் எடப்பாடி வரை போய்விட்டது. அதைக்கண்டு தான் தொகுதியில்  பொறுப்பில் உள்ள கட்சிக்காரர்கள் பலர் இப்பவே செல்போனை ஆஃப் செய்துவிட்டு அங்கங்கே தலைமறைவாகி விட்டனர்.

 

 அதுலயும் கூட கிளை பொறுப்பில் உள்ள கட்சிக்காரர்கள் பலர் சாதாரண செல் போன் வைத்திருத் தவர்கள் கூட இப்ப 15 ஆயிரம்  20ஆயிரம் மதிப்புள்ள டச்சு செல்லைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள்.  அதோடு  மெகா சைஸ் டிவிகளையும் வாங்கி வீடுகளில் மாட்டி இருக்கிறார்கள்.  அந்த அளவுக்கு வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட பணத்தை பகிரங்கமாகவே சுருட்டி  தங்கள் சுயநலத்திற்கு பயன்படுத்தியும் இருப்பது தெரியவருகிறது. 

 

  இருந்தாலும்  இத்தொகுதி அதிமுக கோட்டை என்பதால் குறைந்த பட்சம் ஐந்தாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தேன்மொழி வெற்றி பெற வாய்ப்பு இருக்கு.  அப்படி இல்லாமல் திமுக வெற்றி பெற்றால்  இத் தொகுதியில் உள்ள ஒட்டுமொத்த பொறுப்பாளர்களையும் 
கூண்டோடு  களையெடுக்க எடப்பாடி தயாராகி வருகிறார் என்று கூறினார்கள். ஆக, தேர்தல் ரிசல்ட்டை பொருத்து நிலக்கோட்டை தொகுதியில் கட்சிக்காரர்களின் பதவி பறிபோகுமா? தப்புமா? என்பது தெரியவரும்.

 

சார்ந்த செய்திகள்