Skip to main content

ரெண்டுல ஒண்ணு பார்த்துடுறேன்... தனி மரமாக மோதிய தோப்பு

Published on 24/08/2018 | Edited on 24/08/2018
thoppu venkatachalam


அதிமுகவின் செயற்குழு கூட்டம் வியாழக்கிழமை மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
 

இதில் பேசிய முன்னாள் அமைச்சரும், பெருந்துறை எம்எல்ஏவுமான தோப்பு வெங்கடாசலம், அதிமுக தொண்டர்கள் சோர்ந்துபோய் உள்ளனர். எம்எல்ஏக்கள், ஒன்றிய செயலாளர்கள் பரிந்துரைகள் எதையும் அமைச்சர்கள் செய்து கொடுப்பதில்லை. அவர்களுக்கு வேண்டியதை மட்டுமே செய்து கொள்கின்றனர் என பேசியதும், கூட்டத்தில் இருந்தவர்கள் அவரது பேச்சை வரவேற்று கைதட்டினர்.

 

 


அவருக்கு ஆதரவாக ராஜன் செல்லப்பா, ஜக்கையன் ஆகியோரும் எழுந்து கட்சிக்காரர்களுக்கு மரியாதை இல்லை, ஜெயலலிதா இருந்தபோது ஒவ்வொரு ஒன்றிய செயலாளருக்கும் மெடிக்கல் சீட் வாங்கி தருவார் என்றதும், உடனே அவர்களை எடப்பாடி பழனிசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் சமாதானப்படுத்தினர். 
 

 

 

இதுதொடர்பாக செயற்குழுவில் கலந்து கொண்டவர்களிடம் விசாரித்தபோது, எடப்பாடி முதல் அமைச்சரானபோதே, தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று செங்கோட்டையனும், தோப்பு வெங்கடாசலமும் திவாகரனிடம் கூறியுள்ளனர். திவாகரன் இருவருக்காகவும் பேசியுள்ளார். ஆனால் செங்கோட்டையன் மட்டும் மந்திரியானார். தோப்பு தனிமரமானார். அதோடு தோப்பு மாவட்டத்தை சேர்ந்த கருப்பண்ணன் மந்திரியானார். 
 

மந்திரி பதவி கிடைக்கவில்லை, தான் கொடுக்கும் பரிந்துரைகளையும் கண்டுகொள்ளவில்லை என்பதால் வெறுத்துப்போன தோப்பு வெங்கடாசலம் செயற்குழுவில் இரண்டில் ஒன்று பார்த்துவிடலாம் என வந்துள்ளார். 



 

சார்ந்த செய்திகள்

Next Story

“எங்கிருந்து வதந்தி கிளப்பப்படுகிறது எனத் தெரியவில்லை” - தோப்பு வெங்கடாசலம்

Published on 23/12/2022 | Edited on 23/12/2022

 

'I don't know where the rumor is coming from' - Thopp Venkatachalam

 

“நான் பாஜகவில் சேர உள்ளதாக வேண்டுமென்றே சிலர் வதந்திகளைப் பரப்புகின்றனர். அது உண்மை அல்ல” எனப் பெருந்துறை தொகுதி முன்னாள் எம்எல்ஏ மற்றும் முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாசலம் கூறியுள்ளார்.

 

மேலும் அவர் நம்மிடம் இது தொடர்பாகப் பேசுகையில், ''நான் பாரதிய ஜனதா கட்சியில் சேர உள்ளதாக வேண்டும் என்றே யாரோ சிலர் இவ்வாறு தவறான தகவலைப் பரப்புகின்றனர். அதிமுகவிலிருந்து திமுகவில் கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நான் சேர்ந்தேன். எந்த விதமான எதிர்பார்ப்பும் இன்றி கட்சியில் பணியாற்றுகிறேன். பதவிக்காக நான் கட்சியில் சேரவில்லை. எந்தப் பதவியையும் நான் கேட்கவில்லை. என்னை விட பல்லாண்டுகளாக திமுகவில் பணியாற்றுபவர்கள் இருக்கிறார்கள். எனவே பதவி கொடுங்கள் என்று நான் கூற முடியாது.

 

என்னைப் போன்றே தேர்தலுக்குப் பிறகு திமுகவில் சேர்ந்து சிலர் பதவியைப் பெற்று இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு என் நல்வாழ்த்துக்கள். அமைச்சராக ,எம்எல்ஏவாக இருந்தபோது கூட எனது தொகுதி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பணியாற்றினேன். கடந்த சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு சுமார் 10,000 வாக்குகளைப் பெற்றுள்ளேன். எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். அதிகாரிகளைக் கூட கேட்கலாம் நான் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கானத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நான் முன்னுரிமை அளித்து வந்துள்ளேன் என்று அவர்கள் கூறுவார்கள்.

 

முதல்வர், அமைச்சர்கள், திமுக தலைமை மற்றும் பொறுப்பாளர்களிடம் நான் நல்ல உறவுடன் இருக்கிறேன். நட்பு ரீதியாக பல்வேறு கட்சியின் நண்பர்கள் பழகி வருகின்றனர். அதேபோன்று தான் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் பழகுகின்றனர். அவர்கள் கட்சியில் சேரச் சொல்லி வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அதை நான் ஏற்கவில்லை. திமுக கொள்கைகளில் சில முரண்பாடுகள் எனக்கு இருந்தபோதிலும் திமுகவில் உறுதியுடன் இருக்கிறேன். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் வெற்றிக்காகப் பிரச்சாரம் செய்தேன். உள்ளூர் திமுக பிரமுகர்களுடன் நட்புடன் இருக்கிறேன். ஆனால் எங்கிருந்து வதந்தி கிளப்பப்பட்டது என்பது தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை எனது தொகுதி மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம் " என்றார்.

 

 

Next Story

குடிநீர் திட்டத்தில் விடுபட்ட ஊராட்சிகளையும் இணைக்க வேண்டும்...! -ஆட்சியரிடம் மாஜி அமைச்சர் கோரிக்கை

Published on 16/09/2022 | Edited on 16/09/2022

 

Panchayats missing in drinking water scheme should also be connected...! -Ex-Minister's request to the Governor

 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் செயல்படுத்தப்படும் கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் விடுபட்ட ஊராட்சிகளையும் இணைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணியிடம் அவர் வெள்ளிக்கிழமை மனு கொடுத்தார், பிறகு அவர் கூறும்போது, "பெருந்துறை தொகுதிக்கான கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டம் ரூபாய்.234 கோடி செலவில் மேற்கொண்டு சென்ற இரண்டு மாதங்களுக்கு முன்பு  தமிழக முதல்வர் அவர்கள் துவக்கி வைத்தார். மூன்று ஊராட்சி ஒன்றியங்கள், எட்டு பேரூராட்சி பொதுமக்கள் பயனடையும்படி இத்திட்டம் வடிவமைக்கப்பட்டது.

 

தற்போது சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் ஈங்கூர், வாய்ப்பாடி, வரப்பாளையம், கூத்தம்பாளையம், சிறுகளஞ்சி, பனியம்பள்ளி ஆகிய ஊராட்சிகள் இதில் விடுபட்டுள்ளன. அவற்றை இணைத்து குடிநீர் வழங்க வேண்டும். இப்பகுதியில் சிப்காட் தொழிற்சாலைகளின் ஆலைக் கழிவால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, கால்நடைகள் கூட அந்த தண்ணீரை குடிக்க முடியவில்லை.  ஆகவே மக்களின் குடிநீர் பிரச்சனையை கவனத்தில் கொண்டு விடுபட்ட ஊராட்சிகளுக்கும்  குடிநீர் இணைத்து வழங்க வேண்டும்.

 

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் சென்னிமலை பகுதியில் 60க்கும் மேற்பட்ட குளங்கள் இணைக்காமல் உள்ளதையும் இணைக்க வேண்டும். பெருந்துறை தினசரி காய்கறி சந்தை வளாகத்தில் இரண்டு தளமாக காய்கறிச் சந்தைக்கு கடை அமைத்தால் விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள், சுமைப்பணியாளர்கள் சென்று வருவது சிரமம். எனவே தரைதளத்தில் மட்டும் கடைகள் அமைக்க வேண்டும்." என்றார்.