Published on 02/01/2019 | Edited on 02/01/2019
முன்னாள் முதல்வர், திமுக தலைவர் கலைஞரின் மறைவால் திருவாரூர் தொகுதி காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு இடைத்தேர்தலுக்கான பணிகளும் நடபெற்று வந்தன. வரும் 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து தற்போது நாம் தமிழர் கட்சியின் சார்பாக சாகுல் அமீது போட்டியிடுவார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார்.