Skip to main content

'சந்திப்பை வரவேற்ற நத்தம் விஸ்வநாதன்'-உற்சாகத்தில் அதிமுக தொண்டர்கள்

Published on 28/03/2025 | Edited on 28/03/2025
 'Amit Shah meets in Edappadi; Natham Viswanathan welcomes him' - AIADMK workers in excitement

டெல்லியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திப்பைத் தொடர்ந்து அதிமுகவில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து அதிமுகவினர் 2026 சட்டமன்ற தேர்தல் களப்பணியில் முனைப்புடன் செயல்பட தொடங்கியுள்ளனர். மேலும் எடப்பாடி பழனிசாமி-அமித்ஷா சந்திப்பை நத்தம் விஸ்வநாதன் வரவேற்றுள்ளதால் திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக வத்தலக்குண்டில் நடந்த பூத் கமிட்டி கூட்டத்தில் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் சுதாகர், நகர செயலாளர் பீர்முகமது ஆகியோர் பங்கேற்று  கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். பாஜக உடனான பயணத்திற்கு அடிமட்ட அதிமுக தொண்டர்களும் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்