Skip to main content

தம்பிதுரை காங்கிரசுடன் கை குலுக்க தயார் ஆவது ஏன் ? பரபரப்பான அடுத்த மூவ்! 

Published on 25/01/2019 | Edited on 25/01/2019
t

 

ஜெ. மறைவிற்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகாலமாக எடப்பாடி பழனிச்சாமி அரசை தாங்கிப்பிடிப்பது பாஜக தான் என்கிற குற்றச்சாட்டு தமிழக அரசியல் பார்வையாளர்களால் கூறப்பட்டு வருகிறது. அந்த வகையில் அமைச்சர்கள் டில்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திப்பதும் வருவதுமாக இருந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு மாதமாக லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை பாஜகவை பிடித்து வெளுத்து எடுப்பது ஓ.பி.எஸ்.,இ.பி.எஸ். இருவருக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.   அதிலும் குறிப்பாக பிரதமர் மோடியையும், மத்திய அரசின் செயல்பாட்டையும் தம்பிதுரை கடுமையாக விமர்சனம் செய்தது பிஜேபி தலைவர்கள் இடையே மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் தம்பிதுரை பற்றி எச்.ராஜா கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தார். 

 

அதிமுக பாஜகவுடன் நெருக்கமாக ஆரம்பத்தில் இருந்தாலும் தம்பிதுரை பிஜேபியுடன் நெருக்கமாக இல்லை. அவர் மத்திய அமைச்சராக முயற்சி மேற்கொண்டார். அவர்கள் பிடிகொடுக்கவில்லை. இப்போது ஓபிஎஸ், இபிஎஸ், தங்கமணிக்கு கொடுக்கும் மரியாதை கூட தம்பிதுரைக்கு அவர்கள் தரவில்லை. அதே போல தான் தேர்தலில் போட்டியிடாமல் ராஜ்ஜியசபா சீட்டு கேட்டு முயற்சி பண்ணினார். ஆனால் இந்த ராஜ்ஜியசாபா சீட்டு கொடுக்க மறுத்து வருகிறார்கள். இதனால் தான் இபிஎஸ், ஓபிஎஸ்சுக்கு நெருக்கடி கொடுக்க தம்பிதுரை முடிவு செய்து விட்டார் என்றார். அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பாஜக கூட்டணி என்பதனை எப்போதோ முடிவு செய்து விட்டனர். அது தம்பிதுரைக்கும் தெரியும், மீண்டும் பாஜகவிடம் போய் நிற்பதை அவர் விரும்பவில்லை.

 

ஆனால் கடந்த சில நாட்களாக டில்லியில் உள்ளவர்கள் விரைவில் தம்பிதுரை காங்கிரசுக்கு தாவ முடிவு செய்து விட்டார் என்ற பரபரப்பு தகவல்களை கூற தொடங்கியுள்ளனர். ஜெயலலிதா காலத்தில் இருந்தே தம்பிதுரை காங்கிரஸ் அனுதாபிதான் என்று கூறும் அதிமுக நிர்வாகி ஒருவர் அது அம்மாவுக்கும் தெரியும் என்றார்.  காரணம் ஜெயலலிதா காலத்தில் காங்கிரசுடன் கூட்டு வைக்கும் போது தம்பிதுரைக்கு சீட்டு இல்லாமல் போய்விட்டது. தம்பிதுரை ஜெயலலிதாவிடம் கேட்டும்  ஜெயலலிதா மறுத்துவிட்டார். ஆனால் ராஜீவ் காந்தி,  நேரடியாக ஜெயலலிதாவிடம்  பேசி தம்பித்துரைக்கு கூட்டணியில் காங்கிரசுக்கு கொடுக்கும் தொகுதி ஒன்றை குறைத்து விட்டு தம்பிதுரைக்கு சீட்டு கொடுங்கள் என்று சொல்லி சீட்டு வாங்கினாராம். 
அந்த நன்றி கடன் தற்போது வரை தொடர்கிறது என்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள். ஜெ. இல்லாத நிலையில் இதை சாக்காக வைத்துக்கொண்டு காங்கிரஸ் பக்கம் செல்ல விரும்புகிறார் என்கிறார் அந்த மூத்த நிர்வாகி. முதற்கட்டமாக முகுல் வாஸ்னிக்கை தம்பிதுரை கடந்த வாரம் சந்தித்து பேசி விட்டார். அந்த வகையில் காய்களை நகர்த்தும் தம்பிதுரை அதிமுக மேலிடம் பாஜ கூட்டணி என்று அறிவித்த அடுத்த நிமிடம் ராகுலை சந்தித்து காங்கிரசில் இணைவார் என்கிறார்கள். 


 

சார்ந்த செய்திகள்