கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. கடந்த 40 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் கடந்த 7 ஆம் தேதி திடீர் எனத் திறக்கப்பட்டது. இந்த டாஸ்மாக் கடை திறப்பை எதிர்த்து பெரும்பாலான பெண்கள் போராட ஆரம்பித்தனர்.
இதற்கு இடையில் டாஸ்மாக் திறப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக்கை மூடச் சொல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பை வரவேற்று மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் திருச்சி வரகனேரி, அருகே உள்ள சாலையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
தகவல் கேள்விப்ட்ட காந்தி மார்கெட் போலிசார் அங்கு சென்று ஊரடங்கை மீறி பொதுமக்களுக்கு இனி வழங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலாளர் சுரேஷ், நகரச் செயலாளர் சரவணன், உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
டாஸ்மாக்கை மூடச் சொல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.