Skip to main content

முதல்வர் வீட்டில் பணியில் இருந்த காவலருக்கு கரோனா? - மறுப்பு தெரிவித்த தமிழக அரசு!

Published on 07/05/2020 | Edited on 07/05/2020

 

admk


இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ், தமிழகத்திலும் வேகமாகப் பரவி வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 771 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,829 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பது அரசுக்குச் சவாலாக அமைந்துள்ளது. 


இதனையடுத்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு விடுமுறையில் சென்றிருந்த நிலையில் அவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் முதல்வர் பழனிசாமி வீட்டின் அருகே கிரீன்வேஸ் சாலையில் பணியில் இருந்த பெண் தலைமைக் காவலருக்கு கரோனா தொற்று இல்லை என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதோடு சென்னையிலுள்ள காவலர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க அனைத்து வகையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு கூறியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்