நாங்குநோி தொகுதி இடைத்தோ்தல் 21-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று நிறைவடைந்தது. இதில் நாங்குனேரியில் காங்கிரஸ் வேட்பாளா் ரூபி மனோகரன், அதிமுக நாராயணன், நாம் தமிழா் ராஜநாராயணன் உட்பட 37 போ் 46 மனுக்களை தாக்கல் செய்துள்ளனா். இதில் நிறைவு நாளான நேற்று மட்டும் 28 போ் மனு தாக்கல் செய்தனா். காங்கிரஸ் ரூபி மனோகரனுக்கு மாற்று வேட்பாளராக அவருடைய மகன் அசோக்கும் அதிமுக நாராயணனுக்கு மாற்று வேட்பாளராக பெருமாளும் மனு தாக்கல் செய்துள்ளனா்.
இது தவிர மது குடிப்போா் சங்கம் சாா்பில் அதன் தலைவா் செல்லபாண்டியன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளாா். இதில் நாங்குநோியில் மதுகுடிப்போா்கள் எனக்கு ஓட்டு போட்டாலே நான் ஜெயித்து விடுவேன் என செலலப்பாண்டியன் கூறியுள்ளாா். இதே போல் விக்ரவாண்டி சட்டமன்ற தொகுதியிலும், அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன், திமுக வேட்பாளர் புகழேந்தியும், நாம் தமிழர் கட்சி சார்பாக கந்தசாமியும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் நடக்கும் இரண்டு சட்டமன்ற தொகுதியிலும் சேர்த்து ஒரே ஒரு பெண் வேட்பாளர் மட்டுமே போட்டியிடுகிறார். நாங்குநேரி சட்ட மன்ற தொகுதியில் சுயேட்சையாக சுப்பிரமணியம் என்பவரின் மகள் இந்துராணி போட்டியிடுகிறார். இவரின் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் ஆகும். இடைத்தேர்தலில் 74 பேர் வேட்புமனு தாக்கல் செய்ததில் ஒரே ஒரு பெண் வேட்பாளர் போட்டியிடுவது அனைத்து தரப்பிற்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.