Published on 13/05/2019 | Edited on 13/05/2019
திருப்பரங்குன்றத்தில், அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இவ்வாறு கூறியுள்ளார்.

நமக்கும், அரசியலுக்கும் ஒத்துவராது என்பதை கமல் இனி புரிந்துகொள்ள வேண்டும். பிரிவினை பேசுவதை கமல் நிறுத்திக்கொள்ளாவிடில் கமலின் பேச்சை நிறுத்த பாஜக நடவடிக்கை எடுக்கும் எனக்கூறியுள்ளார். கமல்ஹாசன் தனது பிரச்சாரத்தின்போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. காந்தியை சுட்டுக்கொன்றது கோட்சே என கூறியது குறிப்பிடத்தக்கது.