கடைசி குறளைப் பார்த்து கண்ணீர் சிந்தும் நிலைமையில் தமிழகம் இருந்தது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இடைக்காலப் பொதுச் செயலாளர் தலைமையில் அதிமுக சிறப்பாக செயல்படுகிறது. இப்பொழுதுதான் தீவிரவாதம் தலைதூக்கி உள்ளது என்று வாயைத் திறந்துள்ளார். அதுவும் வலையில் இருந்து எட்டிப் பார்த்து சொல்லிவிட்டு மீண்டும் வலைக்குள்ளேயே சென்றுவிட்டார். அப்பிடி தான் ஓபிஎஸ்.
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் அனைத்தும் இடம் பெற்றுள்ளது. விஜயபாஸ்கரைப் பொறுத்தவரை அவரது நிலையை சொல்லிவிட்டார். அன்றைய முடிவுகளை எடுத்தது சசிகலா மற்றும் ஓ.பி.எஸ். தான். மேலும் முடிவுகள் எது வந்தாலும் சட்டப்படி சந்திக்கிறேன் என விஜயபாஸ்கர் சொல்லிவிட்டார். சசிகலா ஓ.பி.எஸ். இருவரும் குற்றம் செய்தவர்கள் என்ற அடிப்படையில் தான் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் முடிவு இருக்கிறது. தமிழ்நாடே அந்தக் கடைசி குறளைப் பார்த்து கண்ணீர் சிந்தும் நிலைமையில் தான் இருந்தது. குறளில் அவர் என்ன சொன்னார். இந்த மாதிரியான நரிகள் எல்லாம் சேர்ந்து கொன்றுவிட்டது என்று தானே சொன்னார்.
தங்கக் கவசம் தொடர்பான விவாதங்கள் எல்லாம் முடிவுற்றது. மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு உள்ளது. எங்கள் தரப்பில் இருந்த விவாதங்களை எல்லாம் முடித்துவிட்டோம். நாங்கள் தான் கட்சி. எங்களுக்கு தான் உரிமை என எல்லாவிதமான ஆவணங்களையும் கொடுத்துவிட்டோம். இனி நீதிமன்றம் தான் முடிவு செய்யும்” எனக் கூறினார்.