Published on 22/03/2019 | Edited on 22/03/2019

கடந்த 20ஆம் தேதி சேலத்தில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து பிரச்சாரத்தை துவங்கினால் முதல் அமைச்சரும், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி. நேற்று சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மரணம் அடைந்ததற்கு அஞ்சலி செலுத்த சென்றார்.
இந்த நிலையில் இன்று அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி. கருமந்துரை விநாயகர் கோவிலில் வழிபட்டுவிட்டு தனது பிரச்சாரத்தை தொடங்கினார். கூட்டணி கட்சியான தேமுதிகவின் வேட்பாளர் எல்.கே.சுதீஷ்க்கு வாக்கு சேகரித்தார்.