கட்சிக்கு விரோதமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் இபிஎஸ் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ''அதிமுகவின் சட்டங்களுக்கு மாறாக செயல்பட்டால் யாராக இருப்பினும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக நிர்வாகத்தை விமர்சித்து சமூக வலைதளம் போன்றவற்றில் கருத்து பரிமாற்றம் செய்யக் கூடாது. கட்டளையை மீறி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அடிப்படைக் காரணம் எதுவுமின்றி கட்சி புகழுக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடவேண்டாம். அதிமுகவுக்காக உழைக்க விரும்புவோர் மக்கள் தொண்டில் கவனம் செலுத்த வேண்டும் '' என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கஃபீல் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.