Published on 14/06/2019 | Edited on 14/06/2019
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 38 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.இந்த தேர்தல் காலத்தில் உதயநிதி பிரச்சாரம் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் விதமாக இருந்தது.இவரது பிரச்சாரத்தை திமுக தொண்டர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு அவர்களது பிரச்சாரமும் முக்கிய காரணமாக சொல்லாடுகிறது.இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணிச் செயலாளர் பதவி வழங்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் பலரும் திமுக தலைமைக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றனர்.
இதனால் உதயநிதிக்கு திமுக தலைமை ஒரு உத்தரவு போட்டதாக சொல்லப்படுகிறது.அதில் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் என்றால் சினிமாவில் முழு கவனம் செலுத்தாமல் அரசியலில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.மேலும் மக்கள் பிரச்சனையில் கவனம் அதிகமாக செலுத்தி மக்களோடு அதிக தொடர்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்று திமுக தலைமை உத்தரவு போட்டதாக திமுக வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.இதனால் வெகு விரைவில் அரசியலில் தீவிரமாக உதயநிதி செயல்பட உள்ளார் என்று அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றனர்.