Skip to main content

டாக்டர் பட்டம் எங்க கவிஞர் வைரமுத்துவுக்கு கொடுக்கலைனா என்ன... எங்களுக்கு மகிழ்ச்சி தான்!

Published on 02/01/2020 | Edited on 02/01/2020

சமீபத்தில் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகம் கவிஞர் வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்குவது இந்துத்துவாத் தரப்பின் எதிர்ப்பால் டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி ரத்து செய்தனர்.  கடந்த ஆகஸ்டு மாதம் எஸ்.ஆர். எம். பல்கலைக் கழகம் நடத்திய தமிழ்ப் பேராய விருது வழங்கும் விழாவிலேயே டாக்டர் பட்டம் முடிவானது. கடந்த 28-ஆம் தேதி வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை எஸ்.ஆர்.எம். அழைத்திருந்தது. இந்த நிலையில், ஆண்டாளைக் கொச்சைபடுத்திய வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க ராஜ்நாத் சிங் வரலாமா, வந்தால் அவருக்கு கருப்புக் கொடி காட்டுவோம் என்று இந்துத்துவா அமைப்புகள் கொடி பிடிக்க ஆரம்பித்தனர். இந்தத் தகவல் டெல்லிவரை போக, ராஜ்நாத் சிங் தன் புரோகிராமை ரத்து பண்ணிட்டார். 
 

vairamuthu



அதனால் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக கவிஞர் வைரமுத்துவின் வெற்றித் தமிழர் பேரவையினரிடம் கேட்ட போது, ‘ஏற்கனவே அரசு பல்கலைக் கழகங்களான தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகமும், மதுரை காமராஜர் பல்கலைக் கழகமும், கோவை பாரதியார் பல்கலைக் கழகமும் எங்கள் கவிஞருக்கு டாக்டர் பட்டத்தை வழங்கியிருக்கின்றன. இது தனியார் பல்கலைக் கழகம் வழங்க இருந்த பட்டம். இதை பா.ஜ.க. அமைச்சரான ராஜ்நாத் சிங் வந்து கவிஞருக்கு கொடுத்திருந்தால் கூட பலரிடமும் இருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கும். அதனால் இப்போது மகிழ்ச்சியோடு இருக்கிறோம்’ என்கிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்